
தெ.ஆ. உடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தெ.ஆ. அணி 50 ஓவர்களில் 296/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன்கள் எடுத்தார்.
ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
தற்போது, பேட்டிங் செய்துவரும் ஆஸி. 16.2 ஓவர்களுக்கு 89/6 ரன்கள் எடுத்துள்ளது.
களத்தில் மிட்செல் மார்ஷ், பென் துவார்ஷியஸ் விளையாடி வருகிறார்கள்.
ஆஸி. டாப் ஆர்டர் பேட்டர்கள் கேசவ் மகாராஜா சுழல் பந்தில் மோசமாக ஆட்டமிழந்தார்கள்.
பொறுமையாக விளையாடிவரும் மிட்செல் மார்ஷ் 44 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.