மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பு..! ரசிகர்கள் வருத்தம்!

ஆசிய கோப்பையில் தேர்வாகாமல் சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து...
shreyas iyer
ஷ்ரேயாஸ் ஐயர்... IANS
Updated on
1 min read

ஆசிய கோப்பையில் தேர்வாகாமல் சென்ற ஷ்ரேயாஸ் ஐயருக்காக இந்திய ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்தாண்டு நடைபெறும் டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது.

இந்திய அணி விவரம்

சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங் ராணா, ரிங்கு சிங்.

ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஆச்சரியமாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புறக்கணிக்கப்படுவது ஏன்?

கடந்த ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025-இல் 600க்கும் அதிகமான ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயரின் சராசரி 50.33ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 175.07ஆக இருக்கிறது.

இந்த மாதிரியான ஒரு வீரரை எப்படி இந்திய அணி தேர்வு செய்யவில்லை. மீண்டும் மீண்டும் மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அநீதி இழைக்கப்படுகிறதென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மொத்தமாக ஷ்ரேயாஸ் ஐயர் 240 டி20 போட்டிகளில் 6,578 ரன்கள் குவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com