
ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணி செவ்வாய்க்கிழமை மதியம் அறிவிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது.
ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 15 பேர் கொண்ட அணி செவ்வாய்க்கிழமை(ஆக. 19) அறிவிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய டி20 அணியில் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல்லில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியில் காயத்தால் அவதிப்பட்டு வந்த மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி விவரம்
சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங் ராணா, ரிங்கு சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.