ஐசிசி மகளிா் உலகக் கோப்பை ஆட்டங்கள்: பெங்களூரில் இருந்து மும்பைக்கு மாற்றம்
பெங்களூரில் நடைபெறவிருந்த ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் உலகக் கோப்பை மகளிா் ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப். 30 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை
இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ளது., இந்தியாவில் பெங்களூா், குவஹாட்டி, இந்தூா், விசாகப்பட்டினம், இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் பெங்களூா் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலின்போது பலா் உயிரிழந்தனா். காயமடைந்தனா். இந்நிலையில் உலகக் கோப்பை ஆட்டங்களை நடத்துவதற்கான அனுமதி கா்நாடக கிரிக்கெட் சங்கத்துக்கு கிடைக்கவில்லை.
பெங்களருவில் 5 ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது. பட்டியலில் பெங்களூரு நீக்கப்பட்டு நவி மும்பை சோ்க்கப்பட்டுள்ளது.
அங்குள்ள டிஓய் பாட்டில் மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெறும். செப். 30-இல் பெங்களூரில் நடைபெறவிருந்த இந்திய-இலங்கை அணிகள் தொடக்க ஆட்டம் தற்போது குவஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. அக். 3 இல் நடைபெறவிருந்த இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா ஆட்டங்களும் குவஹாட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. லீக் கட்டத்தில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.