
தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஜ்கி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மேத்திவ் பிரீட்ஜ்கி தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான ரன்களை அடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஜ்கி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர், நாதன் எல்லீஸ் ஓவரில் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்பாக 1987-இல் இந்தியாவின் நவஜோத் சிங் சித்து தொடர்ச்சியாக 4 முறை 50-க்கும் அதிகமான ரன்களை அடித்தார்.
இந்நிலையில், தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50க்கும் அதிகமான ரன்களை குவித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவரது சரசரி 96.67-ஆக இருக்கிறது. இதில் 3 அரைசதங்கள், 1 சதம் அடங்கும்.
மேத்திவ் பிரீட்ஜ்கியின் ஒருநாள் போட்டிகள் ரன்கள்
150 vs நியூசிலாந்து, லாகூர்.
83 vs பாகிஸ்தான், கராச்சி.
57 vs ஆஸ்திரேலியா, கைரன்ஸ்.
88 vs ஆஸ்திரேலியா, குயின்ஸ்லேன்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.