
மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்தியதாக தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார்.
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என தெ.ஆ. அணி வென்றுள்ளது.
டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், அதற்குப் பதிலடியாக ஒருநாள் தொடரை தெ.ஆ. வென்றுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தெ.ஆ. 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இங்கிடி 5 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஸ்டீவ் ஸ்மித் இல்லாத ஆஸி. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் லபுஷேனை திட்டமிட்டு வீழ்த்தியதாக இங்கிடி கூறியுள்ளார்.
தெ.ஆ. அணிக்கு எதிராக ஆஸி. பேட்டர்களிலே அதிகமான (55.11) சராசரியைக் கொண்டுள்ளவர் மார்னஸ் லபுஷேன். இவரை ஒரே ரன்னில் இங்கிடி வீழ்த்தினார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தே பார்கிறோம். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தினை எடுத்துச் செல்லும்போது அது மிகவும் உபயோகமாக இருக்கிறது.
லபுஷேன் பந்தை சிறப்பாக விட்டு விட்டு ஆடுவார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் எப்படியும் ரன்கள் அடித்தாக வேண்டும். அதனால் அந்தப் பந்தை வீச வேண்டுமெனத் தோன்றியது.
லபுஷேனுக்கு லைன் மற்றும் லெந்தினை வெளியே இருக்கும்படி எளிமையாக வைத்துக்கொண்டேன். அதற்கு பலன் கிடைத்தது. திட்டமிட்டப்படியே வெற்றியும் கிடைத்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.