
தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸை ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா மெய்டன் செய்து அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸ் 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆடம் ஸாம்பா வீசிய போட்டியின் 15-ஆவது ஓவரில் டெவால்ட் பிரெவிஸ் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அதற்கு முந்தைய ஓவரில் விக்கெட் விழுந்ததால், அவர் மிகவும் பொறுமையாக விளையாடினார்.
அடிக்க முயன்றும் அவரால் ஒரு ரன்கூட எடுக்கமுடியவில்லை. அதிவேக அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடம் ஸாம்பா அதற்கு வேகத்தடையாக அமைந்தார்.
இந்தப் போட்டியில் இதுதான் முதல் மெய்டன் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவரில் 14.4 ஆவது பந்தில் எல்பிடபிள்யூ கேட்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டில் பட்டதால் பிரெவிஸ் தப்பித்தார்.
அதற்கடுத்த ஸாம்பா ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து, 49 ரன்களில் கூப்பர் கானோலி ஓவரில் ஆட்டமிழந்தார்.
பிரெவிஸ் ஆக்ரோஷமாக வெளியேற, கானோலி வில் - அம்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
17.2 ஓவரில் தெ.ஆ. 124/6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. களத்தில் போஷ், வியான் முல்டர் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.