
செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவரை பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ள விநோதமான சாதனைத் துளிகள் சில...
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2010-இல் அறிமுகமான புஜாரா 103 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட்டில் 19 சதங்கள் 35 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஆனால், அவரது நெடும் கிரிக்கெட் பயணத்தில் ஒருமுறைகூட பாகிஸ்தானுக்கு எதிராக அவர் டெஸ்ட் ஆட்டம் விளையாடியதே இல்லை..!
இன்னொருபுறம், டெஸ்ட் ஆட்டத்தில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய அணி வீரர் யார் என்றால் அதுவும் நம்ம புஜாராதான்..!
அவர் இந்திய அணிக்காக கடந்த 2017-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடி, ஒரு இன்னிங்ஸில் 525 பந்துகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்த இடத்தில், இந்திய அணியின் ‘தூண்' என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் உள்ளார். அவர் கடந்த 2004-இல் பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 495 பந்துகளை எதிர்கொண்டார்.
கடந்த 2010 - 2019 வரை, சர்வதேச அளவில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் புஜாரா அளவுக்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிக சராசரி கொண்டிருக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
மேற்கண்ட காலக்கட்டத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிரான புஜாராவின் பேட்டிங் சராசரி 75.27 ஆகும்.
கடந்த 2013 - 2019 வரை, குறைந்தபட்சம் 50 இன்னிங்ஸ்களை எதிர்கொண்ட வீரர்களில் சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க்காமல் அதிக பந்துகளைச் சந்தித்த சாதனையாளரும்கூட..!
அவர் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சராசரியாக 149.7 பந்துகளுக்கு ஒருமுறையே விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இந்த பட்டியலில் அவருக்கடுத்தபடியாக உள்ள கேன் வில்லியம்ஸன் 124.5 பந்துகளுக்கு ஒருமுறையே விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.