கேரம் பந்தை திருப்புகிற சுந்தரன்... அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய அஸ்வின் குறித்து...
CSK thanked Ashwin.
அஸ்வினுக்கு நன்றி கூறிய சிஎஸ்கே. படம்: எக்ஸ் / சிஎஸ்கே.
Published on
Updated on
1 min read

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய அஸ்வின் குறித்து சிஎஸ்கே நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளது.

ஆர். அஸ்வின் கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமாகி மீண்டும் சென்னை அணியுடனே ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அஸ்வின் சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக 221 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசி ஐபிஎல் தொடரில் அஸ்வினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அஸ்வின் அவரது சிறந்த செயல்பாடுகளைச் செய்யத் தவறியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானர்.

தற்போது, வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுவதால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணி அஸ்வின் குறித்து பேசியதாவது:

செப்பாக்கின் சொந்த சிங்கம். கேரம்-பந்தை திருப்புகிற சுந்தரன்! முதல்முறையாக மஞ்சள் நிற ஜெர்ஸியில் தூசி படிந்த சிஎஸ்கேவின் களத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழல் பந்தில் ஆதிக்கம் செலுத்தினாய். எல்லாவற்றையும் கொடுத்தீர்கள்.

நமது பாரம்பரியத்தின் தூணாக இருந்து, சேப்பாக் கோட்டையில் கர்ஜித்தீர்கள். தெருவில் உள்ளவர்களிடமும் மரியாதையைப் பெற்றீர்கள் அஸ்வின்!

வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸில் தொடங்கி அங்கேயே முடிகிறது. எப்போதும் சிங்கம். எப்போதும் எங்களில் ஒருவர்! நினைவுகளுக்கு நன்றி அஸ்வின்! எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Summary

Forever a lion, forever one of us! Thank you for the Yellovely memories, Ash!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com