
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் திராவிட் விலகியுள்ளார்.
ஐபிஎல் 2026-க்கு முன்பாக டிராவிட் இந்த முடிவினை எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டார். அவருக்கு காலில் காயமடைந்தாலும் அணியை வீல் சேரில் வந்து வழிநடத்தினார்.
சஞ்சு சாம்சன் அணியிலிருந்து விலகி சிஎஸ்கேவில் இணைவதாக வதந்திகள் பரவிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பல ஆண்டுகளாக ராகுல் ராயல்ஸின் முக்கியமான மையமாக இருந்துள்ளார். அவரது தலைமைத்துவம் பல தலைமுறை வீரர்களை பாதித்து, அணியில் வலுவான மதிப்பீடுகளை விதைத்துள்ளார். அணியின் கலாசாரத்தில் அழியாத தடம் பதித்துச் சென்றுள்ளார்.
அணியின் கட்டுமான ஆலோசனையில் அவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ராஜஸ்தான் அணிக்கு ராகுல் வழங்கிய சேவைக்கு ஆர்ஆர், வீரர்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.