
ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் எதிரணியில் இருந்த ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த விடியோவை மைக்கேல் கிளார்க், லலித் மோடி வெளியிட்டார்கள்.
இந்த விடியோவுக்கு ஸ்ரீசாந்தின் மனைவு புவனேஷ்வரி அருவருக்கத்தக்க செயல் என தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2008 போட்டியின்போது ஹர்பஜன் சிங் (மும்பை) போட்டிக்குப் பிறகு ஸ்ரீசாந்தை (பஞ்சாப்) கன்னத்தில் அறைந்தார்.
இந்த விவகாரம் குறித்து அஸ்வினின் நேர்காணலில் ஹர்பஜன் மிகவும் மனம் வருந்திப் பேசினார். அதில், “நான் கோபத்தில் செய்த செயலுக்கு ஸ்ரீசாந்தின் மகள் என்னுடன் பேச மறுத்துவிட்டாள். இது எனக்கு மிகுந்த கஷ்டத்தை அளித்தது.
நான் என் வாழ்க்கையில் இருந்து ஒரு நாளை அழிக்க வேண்டுமானால் அந்த ஐபிஎல் நிகழ்வை அழித்து விடுவேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், மைக்கேல் கிளார்க்கின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்த விடியோவை லலித் மோடி காண்பித்துள்ளது சர்ச்சையானது.
இது குறித்து ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஷ்வரி தனது இன்ஸ்டா பக்கத்தில் பேசியதாவது:
நீங்கள் மனிதர்கள் தானா?
லலித் மோடி, மைக்கேல் கிளார்க் உங்களின் செயல்கள் மிகவும் கேவலமாக இருக்கிறது. 2008-இல் நடந்த ஒன்றை உங்கள் புகழுக்காகவும் பணத்துக்காகவும் மீண்டும் இழுத்து வந்ததைப் பார்க்கும்போது நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்ற கேள்வி வருகிறது.
இந்த விவகாரத்தில் இருந்து ஹர்பஜன், ஸ்ரீசாந்த் இருவருமே மீண்டு வந்துவிட்டார்கள். அவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆனால், நீங்கள் மீண்டும் அவர்களது பழைய காயத்தை சீண்டியுள்ளீர்கள். முற்றிலும் அருவருக்கத்தக்க, இதயமே இல்லாத, மனிதாபிமானமற்ற செயல்.
ஸ்ரீசாந்த் பல கஷ்டங்களுக்குப் பிறகு தனது வாழ்க்கையை மீண்டும் கண்ணியத்துடன் தொடங்கி இருக்கிறார். அவரது மனைவியாகவும், அவர் குழந்தையின் தாயாகவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விஷயம் மீண்டும் வருவதைப் பார்க்க வலி மிகுந்ததாக இருக்கிறது.
சுய லாபத்துக்காக பிறரைப் புண்படுத்தாதீர்கள்...
பத்தாண்டுகளுக்கு முன்பாக புதைக்கப்பட்ட கொடூரத்தில் இருந்து கஷடப்பட்டு மீண்டு வந்துள்ள குடும்பத்திற்கு உங்களது விவ்ஸுக்காக எடுத்து வந்துள்ளீர்கள்.
இது வீரர்களை மட்டுமல்ல, எந்தத் தவறுமே செய்யாமல் கேள்விகளையும் அவமானங்களையும் சந்திக்கும் அவர்களது குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள்.
மனிதாபிமானமற்ற உங்கள் செயலுக்கு வழக்குத் தொடரலாம். ஸ்ரீசாந்த் மிகவும் கண்ணியமான, திடமான மனிதர். எந்த விடியோவும் அவரது கண்ணியத்தைக் குறைக்காது.
உங்களது (லலித் மோடி, மைக்கேல் கிளார்க்) சுய லாபத்துக்காக குடும்பங்களையும் அப்பாவி குழந்தைகளையும் புண்படுத்தும் முன்பு கடவுளுக்குப் பயப்படுங்கள் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.