
தில்லி பிரீமியர் லீக்கில் குவாலிஃபயர் 2 போட்டியில் வெஸ்ட் தில்லி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியிலும் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தில்லி பிரீமியர் லீக்கில் குவாலிஃபயர் 2 போட்டியில் வெஸ்ட் தில்லியும் ஈஸ்ட் தில்லியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட் தில்லி ரைடர்ஸ் 139/8 ரன்கள் எடுத்தது.
அர்பித் ரணா 50 ரன்கள் எடுத்து அசத்தினார். மனம் பரத்வாஜ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் ஆடிய வெஸ்ட் தில்லி 17.3 ஓவர்களில் 141/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த அணியில் அதிகபட்சமாக ஆயுஷ் தோசெஜா 49 பந்துகளில் 54 ரன்களும் நிதீஷ் ராணா 26 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தார்கள்.
பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் அசத்திய ’ஆட்டத்தின் சிங்கம்’ என்ற விருது வென்றார். இன்றிரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஈஸ்ட் தில்லியும் சென்ட்ரல் தில்லி அணியும் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.