2-வது ஓடிஐ: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா.. தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதைப் பற்றி...
டாஸ்ஸின் போது கே.எல். ராகுல் - டெம்பா பவுமா.
டாஸ்ஸின் போது கே.எல். ராகுல் - டெம்பா பவுமா.
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ராஞ்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதலாவது போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்டோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

தொடரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று (டிச.3) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வீர் நாராயணன் சிங் திடலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேவேளையில், தென்னாப்பிரிக்க அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் போட்டியில் விளையாடாத கேப்டன் டெம்பா பவுமா, மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். லுங்கி இங்கிடி, கேசவ் மகாராஜ் இருவரும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

தென்னாப்பிரிக்க அணி விவரம்:

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம், டெம்பா பவுமா(கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஜார்ஜி, டெவால்ட் ப்ரீவிஸ், மார்கோ யான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், நண்ட்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

டாஸ்ஸின் போது கே.எல். ராகுல் - டெம்பா பவுமா.
15 ஆண்டுகளுக்குப் பின்... விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி.!
Summary

South Africa have won the toss and have opted to field

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com