

இந்திய வீரர் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 75 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்து ரோஹித் சர்மா சாதனைப் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
இதுவரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4301 ரன்கள் எடுத்துள்ளார். 279 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11516 ரன்களும், 159 டி20 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களும் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்
சச்சின் டெண்டுல்கர் - 34357 ரன்கள்
விராட் கோலி - 27910 ரன்கள்
ராகுல் டிராவிட் - 24208 ரன்கள்
ரோஹித் சர்மா - 20048 ரன்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.