

இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட் போட்டியிலும் 100 விக்கெட்டுகளை எடுததுள்ளார்.
இந்திய வீரர்களில் முதல் வீரராக இந்த சாதனையை பும்ரா நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 தொடரில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பும்ரா பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலமாக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார்.
டெஸ்ட்டில் 234, ஒருநாள் போட்டிகளில் 139, டி20யில் 101 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஏற்கெனவே டி20யில் மட்டுமே அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் பும்ரா இரண்டாமிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.