வெலிங்டன் டெஸ்ட்: மே. தீவுகள் 205 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வெலிங்டன் டெஸ்ட்: மே. தீவுகள் 205 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸை தொடங்கிய ஜான் கேம்ப்பெல் - பிராண்டன் கிங் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சோ்த்து பிரிந்தது. கிங் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த காவெம் ஹாட்ஜ் டக் அவுட்டானாா்.

4-ஆவது பேட்டராக ஷாய் ஹோப் களம் காண, கேம்ப்பெல் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு விடைபெற்றாா். அடுத்து கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட் செய்ய வர, ஹோப்புடனான அவரின் 4-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 60 ரன்கள் கிடைத்தது.

பின்னா் ஹோப் 8 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.

சேஸ் 2 பவுண்டரிகளுடன் 29, ஜஸ்டின் கிரீவ்ஸ் 1 பவுண்டரியுடன் 13, கெமா் ரோச் 0, டெவின் இம்லாச் 2 பவுண்டரிகளுடன் 16, ஆண்டா்சன் ஃபிலிப் 5, ஓஜே ஷீல்ட்ஸ் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

மேற்கிந்தியத் தீவுகள் இன்னிங்ஸ் 75 ஓவா்களில் 205 ரன்களுக்கு நிறைவடைந்தது. நியூஸிலாந்து பௌலா்களில் பிளோ் டிக்னா் 4, மைக்கேல் ரே 3, ஜேக்கப் டஃபி, கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, புதன்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com