

இந்திய டி20 அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் சர்வதேச டி20யில் மோசமாக விளையாடி வருகிறார்.
தொடர்ச்சியாக 17 இன்னிங்ஸ்களில் அரைசதம்கூட அடிக்காமல் விளையாடுவது பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது.
முல்லான்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
கடைசிய 2024 ஜூலை மாதத்தில் அரைசதம் அடித்திருந்தார். இதுவரை 17 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணி, ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருக்கும் இவர் டி20யில் துணைக் கேப்டனாகவும் இருக்கிறார். ஆனால், இவர் டி20யில் சரியான பேட்டரில்லை என இந்திய ரசிகர்கள் உள்பட முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.