அதிவேக இரட்டைச் சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி..! ரசிகர்கள் ஏமாற்றம்!

அதிரடியாக விளையாடிய யு-19 இந்திய வீரர் சூர்யவன்ஷி குறித்து...
Vaibhav Suryavanshi expresses joy after scoring a century
வைபவ் சூர்யவன்ஷிபடம் | பிசிசிஐ
Updated on
1 min read

யு-19 ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரட்டைச் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்திய ரசிகர்கள் இவர் இரட்டைச் சதம் அடிப்பாரென பெரிதும் எதிர்பார்த்திருந்து, ஏமாற்றம் அடைந்தனர்.

யு-19 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவும் யுஎஇ அணியும் துபையில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற யுஎஇ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை தொடக்கினார்.

சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுன்டரிகள், 14 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிவேக இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ரிஷப் பந்த் போல முட்டிப்போட்டி பின்புறம் அடிக்கும்போது ஆட்டமிழந்தார்.

126 பந்துகளில் இஷான் கிஷான் அடித்ததே அதிவேக இரட்டைச் சதமாக இருக்கிறது. தற்போது, இந்திய அணி 40 ஓவர்களில் 311/3 ரன்கள் எடுத்துள்ளது.

Summary

Indian player Vaibhav Suryavanshi, who played brilliantly in the U-19 Asia Cup, was dismissed without scoring a double century.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com