

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி மேலும் சறுக்கலைச் சந்தித்து, 6-ஆம் இடத்துக்கு வந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றால் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் இந்தியா இந்தப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
முன்னதாக, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா 5-ஆம் இடத்திலும், நியூஸிலாந்து 6-ஆம் இடத்திலும் இருந்தன. தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நியூஸிலாந்தின் வெற்றியால், அந்த அணி அதிரடியாக 3-ஆம் இடத்துக்கு முன்னேறியது. இந்தியா 6-ஆம் இடத்துக்கு இறங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மீண்டு வரும் நிலையில், இந்தியா 7-ஆம் இடத்துக்கும் தள்ளப்படலாம்.
தற்போதைய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளது. தென்னாப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், நியூஸிலாந்து 66.67 சதவீத புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.
இலங்கை (66.67), பாகிஸ்தான் (50.00), இந்தியா (48.15), இங்கிலாந்து (30.95), வங்கதேசம் (16.67), மேற்கிந்தியத் தீவுகள் (4.76) ஆகியவை முறையே 4 முதல் 9-ஆம் இடங்களில் உள்ளன.
இந்த சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.