திலக் வர்மா
திலக் வர்மா@BCCI

பந்துவீச்சில் அபாரம்! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

3-ஆவது டி20யில் பந்துவீச்சில் இந்தியா அபாரம்..!
Published on

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இமாசலப் பிரதேசத்தின் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் அந்த அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, 118 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ரன் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா 35 ரன்களும் ஷுப்மன் கில் 28 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 25 ரன்களுடனும் ஷிவம் துபே 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இறுதியில், 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்த இந்திய அணி 120 ரன்கள் திரட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Summary

India vs South Africa, 3rd T20I - India won by 7 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com