

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதலிரண்டு ஆட்டங்களிலும் மண்ணைக் கவ்வியது. இதனால், 5 ஆட்டங்களைக் கொண்ட போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், புதன்கிழமை(டிச. 17) தொடங்கவுள்ள அடிலெய்ட் டெஸ்டில் டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து களம் காணுகிறது.
இதையடுத்து, அந்த அணியில் ஒரேயொரு மாற்றமாக, கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக ஜோஷ் டங் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியில் அதிக விக்கெட்களை சாய்த்தவர் ஜோஷ் டங் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், வேகம் குறைந்த பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான அடிலெய்ட் பிட்ச்சில், இங்கிலாந்தின் விளையாடும் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஷோயைப் பஷீருக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாகிறது. பஷீருக்குப் பதிலாக, அணியில் இடம்பெற்றுள்ள பேட்டிங் ஆல்-ரௌண்டரான வில் ஜாக்ஸ் சுழற்பந்துவீச்சிலும் கைக்கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து களமிறங்குகிறது.
எதிரணியில், உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நாதன் லையன், இங்கிலாந்து விக்கெட்களை பதம் பார்க்க காத்திருக்கிறார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலம்.
அடிலெய்ட் டெஸ்ட் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி விவரம்:
ஸாக் க்ராலி,
பென் டக்கெட்,
ஓலி போப்,
ஜோ ரூட்,
ஹாரி ப்ரூக்,
பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்),
ஜேமி ஸ்மித்,
வில் ஜாக்ஸ்,
ஜோஷ் டங்,
ப்ரைடன் கேர்ஸ்,
ஜோஃப்ரா ஆர்ச்சர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.