

யு-19 ஆசிய கோப்பையில் இந்திய அணியினர் 50 ஓவர்களில் 408 ரன்கள் குவித்தார்கள்.
அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகள் வடிவத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் டாஸ் வென்ற மலேசிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வேதாந்த் திரிவேதியும் அபிக்யான் குண்டும் இணைந்து சிறப்பாக ஆடினார்கள்.
வேதாந்த் திரிவேதி 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.