

வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இதுவரை 308 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முஸ்தஃபிசூர் ரஹ்மான் 387 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.