

முன்னாள் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா ஐஎல்டி20 போட்டியில் மீண்டும் தனது சிறப்பான ஃபார்முக்குத் திரும்பியுள்ளார்.
துபையில் இன்று மதியம் 2.30 முதல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
இலங்கையைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா கடந்த ஐபிஎல் சீசனில் மோசமாக பந்துவீசினார்.
இதனைத் தொடர்ந்து அவர் மினி ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது துபையில் ஐஎல்டி20 போட்டியில் விளையாடிவரும் பதிரானா பவர்பிளேயில் பந்துவீசி மெயிடன் விக்கெட் ஓவர் வீசி அசத்தியுள்ளார்.
மினி ஏலத்தில் மீண்டும் சிஎஸ்கே அணி அவரை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.