

ஐபிஎல் மினி ஏலத்தில் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான அதிகபட்ச வீரர்கள் வரம்பை எட்டிவிட்டனர்.
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராகுல் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ராகுல் சஹாரை ஏலத்தில் எடுத்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸின் சுழற்பந்துவீச்சு வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.