

இந்திய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
ஆர்சிபி அணி முதல்முறையாக 2025 சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் கேகேஆர் அணிக்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் சரியாக விளையாடாததா அவரை அந்த அணி விடுவித்தது.
தற்போது, மினி ஏலத்தில் அவரை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அதிரடி பேட்டரான இவர் ஆர்சிபி அணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளார்.
சையத் முஷ்டக் அலி தொடரில் அவர் இன்று அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
62 ஐபிஎல் போட்டிகளில் 1,468 ரன்கள் எடுத்துள்ள இவர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.