

காற்று மாசு: லக்னௌவில் நடைபெற இருந்த நான்காவது டி20 போட்டி புகை மற்றும் கடுமையான பனிமூட்டத்தினால் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போட்டிக்கு முன்பாக ஹார்திக் பாண்டியா மாஸ்க் அணிந்திருந்ததை வட மாநிலத்தவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி லக்னௌவில் நடைபெற இருந்தது. போட்டி ரத்தானதால் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
கடைசி போட்டியில் தெ.ஆ. வென்றால் மட்டுமே டி20 தொடர் சமன்செய்யப்படும். எப்படியும் இந்தியாவுக்கு தோல்வி கிடையாது என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இருப்பினும் போட்டி ரத்தானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை அவமதித்து விட்டதாக சிலர் எக்ஸ் பக்கத்தில் ஹார்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே, தில்லியில் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், காற்று மாசுபாடு எதுவும் இல்லை, ஹார்திக் பாண்டியாவின் செயல் சொந்த நாட்டை அவமதித்து விட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
சிலர் மோசமான காற்றின் சூழ்நிலை வீரர்களுக்கு ஆபத்து என்றும் ஹார்திக் செயலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இதனால், தேசிய அளவில் ஹார்திக் பாண்டியா டிரெண்டிங்கில் இருந்தார்.
குளிர்காலங்களில் ஏன் போட்டிகளை வட மாநிலங்களில் நடத்த வேண்டுமென சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். கடைசி போட்டி அகமதாபாதில் டிச.19-இல் நடைபெற இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.