

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26: மூன்றாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சை ஆகியுள்ளது.
பேட்டில் படும்போது ஸ்னிகோவில் கோடுகள் வராமலும் பேட்டில் படாதபோது ஸ்னிகோவில் கோடுகள் வந்ததாலும் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
அடிலெய்டில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளில் மிகுந்த விருவிருப்பாக போட்டி சென்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் பேட்டில் படும்போது ஸ்னிகோவில் கோடுகள் வராததால் அவர் தப்பித்தார்.
இதற்கு மார்னஸ் லபுஷேன், ”நிதின் இது மிகவும் அடாவடித்தனாமானது” எனக் கூற, ”ஸ்னிகோவில் இப்படித்தான் வருகிறது” என நடுவர் கூறினார்.
பின்னர் ஒன்னொருமுறை பேட்டில் படாதபோது ஸ்னிகோவில் கோடுகள் வந்ததால் அவர் ஆட்டமிழந்ததாக் கூறியதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதனால் பென் ஸ்டோக்ஸ் விரக்தி அடைந்தார். முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லி இந்த ஸ்னிக்கோவை ஒழிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே முதல் இன்னிங்ஸிலும் அலெக்ஸ் கேரி இப்படியாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை 158 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் - ஆர்ச்சர் களத்தில் இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.