

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வலுவான நிலையில் இருக்கிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து முதல் நாள் முடிவில் 334/1 ரன்கள் எடுத்துள்ளது.
புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே
தொடக்க வீரர்கள் டாம் லாதம் மற்றும் டெவோன் கான்வே இணைந்து 323 ரன்கள் குவித்தார்கள்.
நியூசிலாந்து டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்த தொடக்க வீரர்களாக இவர்கள் வரலாறு படைத்துள்ளார்கள்.
இதற்கு முன்பாக 1930-இல் ஸ்டீவி டெம்ஸ்டர் - ஜேக்கி மில்ஸ் இணைந்து 276 ரன்கள் குவித்திருந்தார்கள்.
தற்போது, லாதம் - கான்வே இணை நியூசிலாந்து வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
இரட்டைச் சதத்தை நோக்கி கான்வே
டாம் லாதம் 137 ரன்களுக்கு கெமர் ரோச் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக விளையாடிய டெவான் கான்வே 279 பந்துகளில் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் குவித்துள்ளார்.
இரண்டாவது இரட்டைச் சதத்தினை நோக்கி நகரும் அவர் தனது அதிகபட்ச டெஸ்ட் ரன்களை அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.
சிஎஸ்கே அணியில் இருந்து கான்வே விடுவிக்கப்பட்டு, மினி ஏலத்தில் அவரை யாருமே எடுக்காததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.