

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக சூர்ய குமாரும் துணை கேப்டனாக அக்ஷர் படேலும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
15 பேர்கொண்ட இந்திய அணி
சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷட் படேல், ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.
நியூசிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் இதே அணி விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபார்மில் இல்லாத ஷுப்மன் கில் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு, இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தாண்டு பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.