

தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரிக் காண்ட்ராட் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஏன் தொடர் நாயகன் விருது வழங்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 3-1 என டி20 தொடரினை கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் ஹார்திக் பாண்டியா...
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 231/5 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 201/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியில் ஹார்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். டெவால்ட் பிரெவிஸ் விக்கெட்டினையும் வீழ்த்தினார். இதனால், ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தத் தொடர் முழுவதும் 142 ரன்கள் குவித்த அவர் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கான்ராட் பேசியதாவது:
எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பும்ராவிடம் இருந்து எதையும் எடுக்கவில்லை. இரண்டு அணிகளுக்குமான ஒரே வித்தியாசம் ஹார்திக் பாண்டியாதான்.
இந்தியா வென்றதுக்கும் நாங்கள் தோற்றதுக்கும் ஒரே காரணம் ஹார்த்திக்கின் பேட்டிங் மட்டுமே. அவர் தனது முதல் பந்தில் அடித்த ஷாட்டில் இருந்தே நாங்கள் பிரச்னையில் சிக்கினோம்.
அவர் டி20யில் இந்த உலகத்திலேயே சிறந்த வீரராக இருக்க காரணம் இருக்கிறது. யாருக்கு தொடர் நாயகன் விருது தருகிறார்கள் எனத் தெரியவில்லை. ஹார்திக் பாண்டியாவிற்கு தரவில்லை எனில் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன்.
இரண்டு அணிகளுக்குமான ஒரே வித்தியாசம் அவர் மட்டுமே எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.