ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

“நாங்கள் எந்தக் கனவுடன் இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வருகை தந்தோமோ, அந்தக் கனவு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.”
ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்
@englandcricket
Updated on
1 min read

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்தது - பென் ஸ்டோக்ஸ் :

ஆஷஸ் வெல்லும் கனவு முடிந்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்குப்பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதங்கத்துடன் கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி. 371 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. அணி 349 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 352 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 3-0 என ஆஸி. தொடரைக் கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது.

இந்தத் தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “நாங்கள் எந்தக் கனவுடன் இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வருகை தந்தோமோ, அந்தக் கனவு இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இது பெரியளவில் ஏமாற்றமளிக்கிறது. இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. அதை நோக்கியே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com