

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள் உருவ கேலிக்கு உள்ளாகி வருகின்றன.
இலங்கை உடனான டி20 தொடரில் இன்று ஸ்மிருதி மந்தனா விளையாட இருக்கிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
திருமணம் ரத்துசெய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், அவர் சமீபத்தி; பகிர்ந்த இன்ஸ்டா புகைப்படத்திற்கு உருவ கேலி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
சல்மான் கானின் பெண் வேஷத்தைக் குறிப்பிட்டு, “அனைத்து மாஸ்டர்பீஸ்களுக்கும் ஒரு போலியான நகல் உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள் பலரும் மந்தனாவுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து, “ஸ்மிருதியின் பேட்தான் பதில் சொல்லும்” எனக் கூறி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.