

டி20 உலகக் கோப்பையில் முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவரா என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
தற்போதைக்கு கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம் என ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றது. முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத கம்மின்ஸ், மூன்றாவது போட்டியில் மட்டும் விளையாடினார்.
மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கம்மின்ஸ் விலகுவதாகக் கூறியுள்ளார்.
அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை வரவிருக்கிறது. சமீப காலங்களில் கம்மின்ஸ் ஆஸி.யின் டி20 அணியில் விளையாடாமல் இருக்கிறார்.
அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
டி20 உலகக் கோப்பையில் சந்தேகம்...
இந்நிலையில், இது குறித்து ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது:
உலகக் கோப்பைக்காக மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம். கம்மின்ஸ் இருப்பாரா அல்லது இல்லையா என்பதை சொல்ல முடியாது.
இப்போதைக்குச் சொல்வதானால் சந்தேகம் என்றே சொல்ல முடியும். இருந்தும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என முன்பே திட்டமிட்டு இருந்தோம்.
ஆஷஸ் தொடரை வெல்வதே இலக்கு...
நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இந்தப் புதிய அணிக்கான கட்டுமானத்தை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
தற்போதைக்கு தொடரை வெல்ல வேண்டும். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.
இனிமேலும் கம்மின்ஸை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. அவருக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது என்றார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
பிப்.11ஆம் தேதி ஆஸி. அயர்லாந்தை எதிர்த்து இலங்கை திடலில் விளையாட இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.