

தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா தன்னிடம் பும்ரா, ரிஷப் பந்த் மன்னிப்பு கேட்டதாகக் கூறியுள்ளார்.
அதேசமயம் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் இந்தியர்களை அவமதிப்பாகப் பேசியதையும் கண்டித்து பேசியுள்ளார்.
என்ன பிரச்னை?
இந்திய அணியை சொந்த மண்ணில் 2-0 என தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்தத் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமாவை குள்ளமாக இருப்பதால் ’பவுனா’ எனக் கிண்டல் செய்து பேசினார்.
இது சர்ச்சையான நிலையில், தெ.ஆ. அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிடச் செய்வது போன்ற பொருள்படியும்பான ’க்ரோவல்’ எனும் வார்த்தையைக் கூறினார்.
இது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தெ.ஆ. அணியின் கேப்டன் பவுமா இஎஸ்பிஎன் கிரிகின்போவின் எழுதியதாவது:
மன்னிப்பு கேட்ட ரிஷப் பந்த், பும்ரா...
என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். கடைசியில் மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப் பந்த் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்.
அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் எனக்கு இருட்டாகிவிட்டது. அது என்னவாக இருக்குமென எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன்.
திடலில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால், நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை என்றார்.
டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி ஒருநாள், டி20 தொடரை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.