

இந்திய தொடருக்கான நியூசிலாந்தின் தலா 15 பேர் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கின்றன. ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் 31 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், இந்திய சுற்றுப்பயணத்துக்கான நியூசிலாந்து அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கேப்டன் மிட்செல் சாண்ட்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்ஏ20 லீக்கில் விளையாடும் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சன் சேர்க்கப்படாத நிலையில், மைக்கேல் பிரேஸ்வெல் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் அணியில் தமிழக வம்சாவளி வீரர் ஆதி அசோக்கிற்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பல மூத்த வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது.
கேப்டன் மிட்செல் சாண்ட்னர், வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. ஆனாலும், டெவன் கான்வே, டேரில் மிட்செல், வில் யங் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியத் தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், டி20 உலகக் கோப்பைக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மத்தியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருநாள் அணி அறிவிக்கப்படவில்லை.
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன், இஷ் சோதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.