

இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பையில் பிகார் அணி 50 ஓவர்களில் 574/6 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளது.
விஜய் ஹசாரே கோப்பையில் அருணாசல் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பிகார் பேட்டிங் தேர்வு செய்தது.
நிரண்யிக்கப்பட்ட 50 ஓவர்கள் 574/6 ரன்கள் குவித்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
128 எஸ்.கானி 40 பந்துகளில் 128 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
விஜய் ஹசாரே வரலாற்றிலேயே 574 ரன்கள் குவித்த முதல் அணியாக பிகார் வரலாறு படைத்துள்ளது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை கடந்தவர்கள்
1. வைபவ் சூர்யவன்ஷி - 59 பந்துகள் (2025- அ.பி. எதிராக)
2. ஏபிடி வில்லியர்ஸ் - 64 பந்துகள் (2015 - மே.இ.தீ. எதிராக)
3. ஜாஸ் பட்லர் - 65 பந்துகள் (2022 - நெதர்லாந்துக்கு எதிராக)
அதிவேக சதம், 150 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.