லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரோஹித் சர்மா..! ஹைலைட்ஸ் விடியோ!

விஜய் ஹசாரே கோப்பையில் ரோஹித்தின் பேட்டிங் குறித்து...
Rohit sharma at Vijay Hazare Trophy
ரோஹித் சர்மாபடம்: மும்பை இந்தியன்ஸ்.
Updated on
1 min read

விஜய் ஹசாரே கோப்பையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகவும் இயல்பாக இருந்தது.

அவர் முதல் போட்டியிலேயே 155 ரன்களை குவித்தார். இதன் விடியோவை பிசிசிஐ டொமஸ்டிக் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்.

ஒருநாள் போட்டிகளில் விளையாட விஜய் ஹசாரே தொடரில் விளையாட வேண்டுமென பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா மும்பை அணிக்காக விளையாடுகிறார்.

முதலில் பேட்டிங் செய்த சிக்கிம் அணி 50 ஓவர்களில் 236/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 30.3 ஓவர்களில் 237/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 94 பந்துகளில் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 9 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் அடங்கும்.

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகமுறை (9 முறை) 150-க்கும் அதிகமான ரன்களை குவித்தர்களில் ஆஸி. வீரர் டேவிட் வார்னரின் சாதனையை சமன்செய்துள்ளார்.

ரோஹித் பேட்டிங் விடியோவை பிசிசிஐ டொமஸ்டிக் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Summary

Rohit Sharma's batting in the Vijay Hazare Trophy was very natural.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com