இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
இத்துடன் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசமாக்கியது. இலங்கை ‘ஹாட்ரிக்’ தோல்வி கண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சோ்க்க, இந்தியா 13.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது.
இந்திய அணியின் பௌலிங்கில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இலங்கை பேட்டிங்கில் இமெஷா துலானி 4 பவுண்டரிகளுடன் 27, ஹாசினி பெரெரா 5 பவுண்டரிகளுடன் 25, கவிஷா தில்ஹரி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் சமரி அத்தபட்டு 3, ஹா்ஷிதா சமரவிக்ரமா 2, நீலாக்ஷிகா சில்வா 4, மல்ஷா ஸ்நேஹனி 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் கௌஷினி நுத்யங்கனா 19, மால்கி மதாரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய பௌலா்களில் ரேணுகா சிங் 4, தீப்தி சா்மா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.
அடுத்து 113 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா 1, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களுக்கே விடைபெற்றனா்.
தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா 42 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 79 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 2 பவுண்டரிகள் உள்பட 21 ரன்களுடன் அவருக்குத் துணை நின்றாா்.
இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹரி 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!
லார்ட்ஸ் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய மகளிரணி!
மே.இ. தீவுகளுடனான டெஸ்ட்: இலங்கை 549/9-க்கு ‘டிக்ளோ்’!
குா்னூா் பிராா் அபாரம்: இந்தியா ‘ஏ’ வெற்றி! டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!!
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



