

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் இடம்பெறாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற மினி ஏலத்தில் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அடுத்த சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் வெங்கடேஷ் ஐயர் இடம்பெறாமல் போகலாம் என அனில் கும்ப்ளே கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: எதிர்வரும் ஐபிஎல் சீசனின் ஆரம்பகட்ட போட்டிகளில் ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் வெங்கடேஷ் ஐயர் இடம்பெற மாட்டார். சாம்பியன் பட்டம் வென்ற அணியின் மீது சந்தேகத்தை உருவாக்க யாரும் விரும்பமாட்டார்கள். அதன் காரணமாகவே, முக்கிய சுழற்பந்துவீச்சாளர்கள் ஏலத்தில் வந்தபோதும், சூயாஷ் சர்மா அணியில் தொடர்கிறார்.
வெங்கடேஷ் ஐயர் அணியில் இணைந்துள்ளது ஆர்சிபிக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியளிக்கும். தற்போதுள்ள ஆர்சிபி அணி நன்றாக செயல்பட்டுள்ளது. ஏலத்தில் புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள் அணிக்கு மேலும் வலிமை சேர்ப்பார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.