தோல்வியே காணாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி!

ஆஷஸ் தொடரில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் முதல் தோல்வி குறித்து...
Australia's Steve Smith directs fielders on Day 2 of their Ashes cricket test match against England in Melbourne
ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். படம்: ஏபி
Updated on
1 min read

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் 2025-26: ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் முதல் தோல்வி இன்று நிகழ்ந்துவிட்டது.

இதுவரை ஆஷஸ் டெஸ்ட்டில் தோல்வியே காணாத கேப்டன் என்ற அவரது ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

14 ஆண்டுகளில் இங்கிலாந்தின் முதல் வெற்றி

பாக்ஸிங்டே டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து 110க்கு ஆட்டமிழந்தது.

இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. 132க்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணி 178/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2011க்குப் பிறகு முதல்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளது.

கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தனது முதல் தோல்வியை ஆஷஸ் டெஸ்ட்டில் பதிவு செய்துள்ளார்.

தோல்வியே காணாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனை முறியடிப்பு

இதுவரை, ஆஷஸ் தொரரில் ஸ்டீவ் ஸ்மித் 9 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 7 போட்டிகளில் வெற்றி, 1 போட்டி டிரா, 1 தோல்வியிலும் முடிவடைந்துள்ளது.

1. பிரிஸ்பேன், 2017 - வெற்றி

2. அடிலெய்டு, 2017 - வெற்றி

3. வாக்கா, 2017 - வெற்றி

4. மெல்போர்ன், 2017 - டிரா

5. சிட்னி, 2018 - வெற்றி

6. அடிலெய்டு, 2021 - வெற்றி

7. பெர்த், 2025 - வெற்றி

8. பிரிஸ்பேன், 2025 - வெற்றி

9. மெல்போர்ன், 2025 - தோல்வி.

Summary

In the history of Ashes cricket, Captain Steve Smith's first defeat occurred today. His record of being an undefeated captain in the Ashes has also come to an end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com