கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நியூஸிலாந்து ஆல் - ரௌண்டர்!

நியூஸிலாந்து ஆல் - ரௌண்டர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
டக் பிரேஸ்வல்
டக் பிரேஸ்வல்@BLACKCAPS
Updated on
1 min read

நியூஸிலாந்து ஆல் - ரௌண்டர் டக் பிரேஸ்வல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 120 விக்கெட்டுகளையும் 915 ரன்களையும் எடுத்துள்ளார்.

அவர் அந்த அணிக்காக 28 டெஸ்ட், 21 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த 2011 இல் ஹோபர்ட்டில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

அந்த ஆட்டத்தில் அவரது சிறந்த பந்துவீச்சின் காரணமாக நியூஸிலாந்து 7 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. அவர் அந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Doug Bracewell has announced his retirement from all cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com