

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் விலகியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 4 ஆம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் காயம் காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் விலகிய நிலையில், தற்போது அந்த வரிசையில் கஸ் அட்கின்சனும் இணைந்துள்ளார்.
காயம் காரணமாக விலகியுள்ள கஸ் அட்கின்சனுக்குப் பதிலாக அணியில் மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.