

மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீராங்கனைகளான எல்லிஸ் பெரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4-வது சீசன் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர்களான எல்லிஸ் பெரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.
எல்லிஸ் பெரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், அன்னாபெல் சதர்லேண்ட் தில்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் அடுத்த சீசனில் விளையாடவிருந்த நிலையில், தற்போது இருவரும் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
எல்லிஸ் பெரிக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சயாலி சத்கரேவும், அன்னாபெல் சதர்லேண்டுக்குப் பதிலாக தில்லி கேபிடல்ஸ் அணியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அலானா கிங்கும் விளையாடுவார்கள் என மகளிர் பிரீமியர் லீக் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 4-வது சீசன் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.