

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
திருவனந்தபுரத்தில் நேற்று (டிசம்பர் 30) நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது. இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஷஃபாலி வர்மாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கப்பட்டது.
நேற்றையப் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் தீப்தி சர்மா 152 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷுட் 151 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தீப்தி சர்மா முறியடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.