சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கிறிஸ் கெயில்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.
கிறிஸ் கெயில் (கோப்புப் படம்)
கிறிஸ் கெயில் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி மார்ச் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரானது நவி மும்பை, ராஜ்காட் மற்றும் ராய்பூரில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இந்தத் தொடரில் விளையாடவுள்ளதை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அண்மையில் உறுதி செய்தார்.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் கிறிஸ் கெயில்

பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், கிறிஸ் கெயில், மக்கயா நிட்னி மற்றும் மாண்டி பனேசர் போன்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக கிறிஸ் கெயில் கூறியதாவது: சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து, மிகப் பெரிய தருணங்களை சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் உருவாக்க உள்ளது. இந்தத் தொடரில் யுனிவர்ஸ் பாஸ் எனர்ஜியைக் கொண்டுவர நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

இது தொடர்பாக மக்கயா நிட்னி பேசியதாவது: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ள இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் மிகவும் நினைவுகூரத்தக்கதாக இருக்கப் போகிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தத் தொடர் கண்டிப்பாக மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com