
இங்கிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
17 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 104/3 ரன்கள் எடுத்துள்ளது.
இது குறித்து ரோஹித் சர்மா, “புதன்கிழமை நடைபெற்ற பயிற்சியின்போது விராட் கோலிக்கு வலது முட்டியில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் விளையாடவில்லை” என டாஸின்போது தெரிவித்தார்.
காயம் பெரியதாக இல்லை அடுத்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய அணி இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 295 போட்டிகளில் 13,906 ரன்கள் குவித்துள்ளார். இதில் 50 சதங்கள், 72 அரைசதங்கள் அடங்கும்.
பிஜிடி தொடரைத் தொடர்ந்து ரஞ்சி போட்டியிலும் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.