குஜராத் டைட்டன்ஸை வாங்கும் டோரண்ட் குழுமம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பங்குகள் விற்கப்படுவது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம் ANI
Published on
Updated on
1 min read

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பெரும்பாலான பங்குகளை அகமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் டோரண்ட் குழுமம் வாங்கவுள்ளது.

இதற்கான அனுமதி கோரி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிக பங்குகளை வைத்துள்ள சிவிசி கேபிடல் நிறுவனம் கடிதம் வழங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு இரண்டு புதிய அணிகளை பிசிசிஐ அறிமுகம் செய்தது. அப்போது, குஜராத் அணியை சிவிசி கேபிடலும், லக்னெள அணியை ஆர்பிஎஸ்ஜி குழுமமும் வாங்கின.

அப்போது, குஜராத் டைட்டன்ஸ் அணியை வாங்க போட்டியிட்ட டோரண்ட் குழுமம், கேபிடல் நிறுவனத்தைவிட குறைவான தொகையை தெரிவித்ததால் ஏலத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிடல் நிறுவனத்திடம் இருந்து குஜராத் அணியை வாங்குவதற்கு டோரண்ட் குழுமம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

ஆனால், ஐபிஎல் அணியை வாங்கும் நிறுவனம் குறைந்தது 3 ஆண்டுகள் அணியின் பங்குகளை விற்க முடியாது என்பதால், குஜராத் அணியை வாங்கும் முயற்சி தடைபட்டிருந்தது.

நேற்றுடன் குஜராத் அணியை கேபிடல் நிறுவனம் வாங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பங்குகளை விற்பதற்கு அனுமதி கோரி பிசிசிஐக்கு கேபிடல் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

67 சதவிகித பங்குகளை வாங்கும் டோரண்ட் குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் குஜராத் அணி வரவுள்ளது.

இருப்பினும், 2025 ஐபிஎல் தொடரில் அணியில் எவ்வித மாற்றமும் டோரண்ட் குழுமம் செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கேப்டனாக கில்லும், பயிற்சியாளராக நெஹ்ராவும் குறைந்தபட்சம் இந்த சீசனில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமாகி மூன்று ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு முறை கோப்பையும் ஒரு முறை இரண்டாம் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com