
ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அணியில் இணைந்ததாக ஆர்சிபி அணி வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.
பிரபல ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். இந்தாண்டு டபிள்யூபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதை மறுக்கும் வகையில் ஆர்சிபி அணி விடியோ வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு டபிள்யூபிஎல் பிப்.14ஆம் தேதியன்று தொடங்குகிறது. முதல் நாளில் ஆர்சிபி அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியில் முக்கியமான வீராங்கனையாக இருக்கும் எல்லிஸ் பெர்ரி, கடந்த டபிள்யூபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
காயம் ஏற்பட்டது எப்படி?
இங்கிலாந்துடனான பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கின்போது தனது இடது பக்கம் கீழே விழுந்தபோது காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
இருப்பினும் பேட்டிங் விளையாடி அசத்தினார். இங்கிலாந்துடனான தொடரை வென்று அசத்திய மகளிர் ஆஸ்திரேலிய அணி.
இந்த நிலையில் காயத்தினால் அவதிப்பட்டு வந்ததால் எல்லிஸ் பெர்ரி டபிள்யூபிஎல் தொடரில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியன.
அதிரடி வருகை
அதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எல்லிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் இணைந்தார்.
மாஸாக அவர் அணியில் இணைந்ததை விடியோவாக வெளியிட்டுள்ளது ஆர்சிபி அணி. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த டபிள்யூபிஎல் தொடரில் எல்லிஸ் பெர்ரி 9 போட்டிகளில் 347 ரன்கள், 125.72 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும்.
எல்லிஸ் பெர்ரி அணியில் இணைந்தது ஆர்சிபி ரசிகர்களை ஆனந்த பெருமூச்சு விடவைத்துள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.