
ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாடிய கேரள, ஜம்மு -காஷ்மீர் அணிகள் போட்டி சமனில் முடிவடைந்தது. இருப்பினும் கேரள அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ரஞ்சி கோப்பை போட்டிகள் அக்.11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தற்போது காலிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ளன.
காலிறுதி 1இல் ஜம்மு காஷ்மீர், கேரள அணிகள் மோதின. ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுக்க கேரள அணி 281 ரன்கள் எடுத்தது.
அடுத்து 2ஆவது இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் 399/9 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக கேரள அணி 295/6 ரன்கள் எடுக்க 5நாள் ஆட்டம் சமனில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி?
இருப்பினும் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 1 ரன் முன்னிலை பெற்றதால் அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
112*ரன்கள் (172 பந்துகள்) 44* ரன்கள் (162 பந்துகளில்) எடுத்த கேரள அணியைச் சேர்ந்த சல்மான் நிஜார் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகதேர்வானார்.
அரையிறுதிப் போட்டிகள்
பிப்.17ஆம் தேதி கேரளா, குஜராத் அணிகளும் விதர்பா, மும்பை அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிகளில் பிப்.26ஆம் தேதி விளையாடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.